யோகி பாபுவை இயக்கும் வினோத்
ADDED : 626 days ago
அஜித் நடித்த துணிவு படத்தை இயக்கிய வினோத் அதையடுத்து கமல் நடிப்பில் ஒரு படத்தை இயக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்த படம் விவசாயிகள் பிரச்னையை பேசும் படமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் பல மாதங்களுக்கு பிறகு தற்போது அந்த படம் தள்ளிப்போய் விட்டதாக கூறுகிறார்கள். அதையடுத்து கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்த எந்த உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது குறுகியகால தயாரிப்பாக யோகி பாபு நடிக்கும் ஒரு படத்தை வினோத் இயக்குவதாகவும், அரசியல் நையாண்டி கலந்த காமெடி கதையில் உருவாகும் அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.