'சமூக விரோதி'க்கு தணிக்கை சான்றிதழ் தர மறுப்பு
ADDED : 633 days ago
சீயோனா பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் சீயோன் ராஜா எழுதி இயக்கி தயாரித்து இருக்கும் படம் 'சமூக விரோதி'. இந்த படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து தயாரிப்பு நிறுவனம் சார்பாக திரைப்பட தணிக்கை குழுவினர் படம் பார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தயாரிப்பு தரப்பு படத்தை மறு தணிக்கை செய்ய விண்ணப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்த இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.