பிரதமர் மோடிக்கு ஒரு சல்யூட்- விஷால் வெளியிட்ட பதிவு
ADDED : 626 days ago
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் செய்த மிகச்சிறந்த சாதனைதான் இந்த ராமர் கோவில் திறப்பு விழா. ஜெய்ஸ்ரீ ராம். இந்த ராமர் கோவில் பல தலைமுறைகளாக நினைவு கூறப்படும். இந்த அற்புதமான திட்டத்துக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி அவர்களுக்கு சல்யூட். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று விஷால் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.