‛எமர்ஜென்சி' ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 630 days ago
பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். தமிழில் ‛தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2' ஆகிய படங்களில் நடித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி ‛எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். 1975ல் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட எமர்ஜென்சியை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வரும் ஜூன் 14ல் இந்த படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளார் கங்கனா. ‛‛இந்தியாவின் இருண்ட நேரத்திற்குப் பின்னால் உள்ள கதையைத் திறக்கிறது. ‛எமர்ஜென்சி' ஜூன் 14, 2024 அன்று திரையரங்குகளில்...'' என தெரிவித்துள்ளார் கங்கனா.