ரூ.2 கோடிக்கு எலெக்ட்ரிக் கார் வாங்கினார் விஜய்
ADDED : 623 days ago
பெட்ரோலிய வளம் குறைந்து வருவதால் வரும் காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் தான் ஆதிக்கம் செலுத்தும். அதன் பயன்பாடு அதிகரிக்கும்போது விலையும் அதிகரிக்கும். இதனால் பலரும் இப்போதே எலெக்ட்ரிக் கார்களை வாங்கத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் விஜய் 2.13 கோடி மதிப்பிலான எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கி உள்ளார். புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்பு இது.
விஜய் வாங்கிய காரின் புகைப்படம் வெளியாகவில்லை. ஆனால் இந்த மாடல்தான் அந்த கார் எனக்கூறி, அவரது ரசிகர்கள் காரின் புகைப்படத்தை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முதல்முறையாக இவ்வளவு விலை உயர்ந்த எலக்ட்ரிக் காரை வாங்கியிருப்பது விஜய்தான் என்கிறார்கள்.