சிங்கப்பூர் சலூன் படத்தில் ஒளிந்திருக்கும் சர்ப்ரைஸ்
ADDED : 631 days ago
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. மீனாட்சி சவுத்ரி , லால், சத்யராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோர் சிறப்பு ரோலில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இதில் ஒரு முக்கிய நடிகர் சர்ப்ரைஸ் ரோலில் நடித்துள்ளார் என தகவல் பரவி வந்த நிலையில் தற்போது அந்த நடிகர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதில் அரவிந்த் சாமி தான் சிறப்பு ரோலில் நடித்துள்ளார். இதை தான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் நாளை ஜனவரி 25ந் தேதி திரைக்கு வருகிறது.