விஜய்யின் கோட் படத்தில் இணைந்த கனிகா
ADDED : 639 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் தற்போது அஜித்தின் வரலாறு உள்பட பல படங்களில் நடித்த கனிகாவும் இணைந்திருக்கிறார். இதையடுத்து, வெங்கட் பிரபு உடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி என்று அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் கனிகா. இதன் மூலம் அவர் கோட் படத்தில் இணைந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. அதோடு தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் கனிகா.