உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தினேஷ் மீது நடவடிக்கையா? - சின்னத்திரை நடிகர் சங்கத்தின் முடிவு என்ன?

தினேஷ் மீது நடவடிக்கையா? - சின்னத்திரை நடிகர் சங்கத்தின் முடிவு என்ன?

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக சிவன், பொதுச் செயலாளராக போஸ் வெங்கட் தற்போது பதவியில் உள்ளனர். இவர்கள் பதவிக்கு வந்தவுடன் நடைபெறும் முதல் பொதுக்குழு வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த முறை சங்க நிர்வாகத்தில் பதவியிலிருந்த ரவி வர்மா தலைமையிலான குழு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த குழுவில் நடிகர் தினேஷூம் பதவியிலிருந்தார். எனவே, வருகிற பொதுக்குழுவின் போது தினேஷ் மற்றும் மற்ற நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்கிற கேள்வி சின்னத்திரை வட்டாரங்களில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !