சிரித்தே மயக்கும் பிரியங்கா! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
ADDED : 626 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார் பிரியங்கா. அந்த தொடரில் ஹோம்லி லுக்கில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்திருந்தார். தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியல் முடிந்துவிட்ட நிலையில் இனி அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுப்பார் என தெரிய வருகிறது. இந்நிலையில், அண்மையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.