உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்றைய தெலுங்கு 'அயலான்' வெளியீட்டில் சிக்கல்

இன்றைய தெலுங்கு 'அயலான்' வெளியீட்டில் சிக்கல்

ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் 'அயலான்'. இப்படம் தமிழில் வெளியான அன்றே தெலுங்கிலும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு தெலுங்குப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது. அதன் காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இன்று வெளியாவதாக இருந்தது.

இந்நிலையில் இன்று வெளியாக வேண்டிய படம் சட்டச்சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. இன்றைய காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த சிக்கலை தீர்த்த பிறகுதான் படம் வெளியாகும் என்கிறார்கள். இன்று வங்கிகளும், நீதிமன்றங்களும் விடுமுறை என்பதால் சிக்கல் தீர வாய்ப்பில்லை. அடுத்த காட்சிகளுக்காவது படம் வெளியாகுமா என்பது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !