தனுஷ் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்!
ADDED : 663 days ago
கேப்டன் மில்லர் படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் தனுஷ். இந்த படத்தில் அவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பதாகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாகவும் அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது அப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் என்பவரும் இணைந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் தனுஷ்- சேகர் கம்முலா இணையும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகிறது.