மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
614 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
614 days ago
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
இது கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டத்தில் நடைபெறும் படம் என்பதால் பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாகிறது. இதுவரை இப்படத்திலிருந்து சூர்யாவின் தோற்றங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்துள்ளார் . இன்று பாபி தியோலின்பிறந்த நாளை முன்னிட்டு உதிரன் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக பர்ஸ்ட் லுக் தோற்றத்துடன் வாழ்த்துக்களை படக்குழு தெரிவித்துள்ளனர். மேலும், இவருக்கு இந்த படத்தில் தமிழில் அருண் ராஜா காமராஜ் டப்பிங் பேசவுள்ளார் என கூறப்படுகிறது.
614 days ago
614 days ago