ஆந்திராவில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு!
ADDED : 700 days ago
ஜெய்பீம் பட இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, திருவனந்தபுரம், மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து கடந்த ஒரு சில வாரங்களாக இதன் படப்பிடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தனர். இப்போது வேட்டையன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள கடப்பா பகுதியில் இன்று தொடங்கியுள்ளனர். இதில் பஹத் பாசில், ராணா டகுபதி இருவரும் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.