சின்னத்திரை நடிகையை மணந்தார் ஜீவா பட வில்லன்
ADDED : 619 days ago
மலையாள திரையுலகில் சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சினிமாவில் நடிகராக மாறியவர் கோவிந்த் பத்மசூர்யா. கடந்த 2016ல் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கீ என்கிற படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுண்டபுரம்லோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருக்கும் இவரை போலவே சின்னத்திரையிலும் சினிமாவிலும் வளர்ந்து வரும் கோபிகா அனில் என்பவருடன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் இவர்களது திருமணம் திருச்சூரில் உள்ள வடக்கும் நாதன் கோவிலில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. மணமக்களுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.