குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்ட சமந்தா
ADDED : 666 days ago
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்த சமந்தா, அதன்பிறகு எந்த புதிய படங்களிலும் நடிக்கவில்லை. மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். உடல்நலம் பெற்றதும் விரைவில் தமிழ், தெலுங்கில் புதிய படங்களில் கமிட்டாகி நடிப்பார் என்று கூறப்படுகிறது. வெளிநாடு மற்றும் வெளிஇடங்களுக்கு செல்லும்போது தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் சமந்தா. தற்போது தான் குதிரை சவாரி பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதனுடன் ‛சூரிய அஸ்தமனம் மற்றும் குணப்படுத்துதல்' என குறிப்பிட்டுள்ளார்.