திருப்பதியில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்த அருள்நிதி
ADDED : 625 days ago
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி. அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். ஆனாலும் அருள்நிதிக்கு அரசியல் ஆசை இன்றி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 'வம்சம்' படத்தில் அறிமுகமான அவர் அதன் பிறகு பல படங்களில் நடித்தார். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அருள்நிதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்கு பிறகு கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த மற்றும் லட்டு பிரசாதங்களை பெற்றுக் கொண்டார். 'டிமாண்டி காலனி' 2ம் பாகத்தின் வெற்றிக்கான வேண்டுதலுக்காக அவர் திருப்பதி வந்ததாக நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.