உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாளில் சிம்பு 48வது பட அப்டேட்

பிறந்தநாளில் சிம்பு 48வது பட அப்டேட்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என அறிவித்து கடந்து பல மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இது வரலாற்று படமாக உருவாகுவதால் இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்திற்காக சிம்பு நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார். அதோடு பல தற்காப்பு கலைகளையும் கற்று வருகிறார். இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு சிம்பு 48வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர். மேலும், பிப். 3ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !