மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
607 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
607 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
607 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
607 days ago
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நம்பிக்கை விசுவாசிகளில் ஒருவராக கேசவ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தெலுங்கு நடிகரான ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில், இவர் சம்பந்தப்பட்ட நடிகையுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டியதாக நடிகையின் குடும்பத்தாரால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது இவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் புஷ்பா 2 படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருகிறார் ஜெகதீஷ். இவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதால் படப்பிடிப்பு இன்னும் தாமதம் ஆகுமோ அதனால் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகுமோ இங்கே கலக்கத்தில் இருந்த புஷ்பா 2 படகுழுவினர் இவர் திரும்பி வந்ததை தொடர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
607 days ago
607 days ago
607 days ago
607 days ago