பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாகும் அஜித் பட நடிகை
ADDED : 607 days ago
வால்டர் வீரைய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிப்பதாக அறிவித்தனர். ஏற்கனவே கவுதம் மேனன், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்லோ ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, விஷாலின் சக்ரா மற்றும் மாதவனின் விக்ரம் வேதா உள்ளிட்ட தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.