உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வரலாற்று படத்தில் சிவராஜ் குமார்

வரலாற்று படத்தில் சிவராஜ் குமார்

கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமாகி உள்ளார். தற்போது சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ, பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் ராவ் உடன் இணைந்து புதிய படத்தில் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகும் வரலாற்று படம் என கூறப்படுகிறது.

இயக்குநர் ஹேமந்த் ராவ் கூறியதாவது, ‛‛ஒரு நடிகராக சிவராஜ்குமாரின் அனுபவம் மிகப்பெரியது. அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு'' என்றார்.

விரைவில் மற்ற அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !