உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமண தேதியை அறிவித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா

திருமண தேதியை அறிவித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா

பிகில், விருமன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா. இவர் தனது மாமா கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். பிப்ரவரி மூன்றாம் தேதி அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் தற்போது இந்திரஜா தனது வருங்கால கணவருடன் இணைந்து இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வருகிற மார்ச் 24ம் தேதி தங்களது திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு எங்கள் முதல் பத்திரிகை இது என்றும், எங்களை நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் இந்திரஜா. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !