உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி மகள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்?

ரஜினி மகள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்?

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் மற்றும் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களை இயக்கியவர். தற்போது மூன்றாவது படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் புதிய படத்தை சவுந்தர்யா இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கின்றார். மேலும், இதற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !