யஷ் படத்தில் ஷாரூக்கான்?
ADDED : 656 days ago
கே.ஜி.எப் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராக உள்ளார் யஷ். அடுத்து இவர் நடிக்கும் அவரது 19வது படத்திற்கு 'டாக்சிக்' என தலைப்பு வைத்துள்ளனர். கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். ஏற்கனவே இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளாக கரீனா கபூர், ஸ்ருதிஹாசன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.