தமிழ்நாடு, கேரளாவில் ரீ-ரிலீஸ் ஆகும் அல்லு அர்ஜுன் படம்
ADDED : 609 days ago
கடந்த 2018ல் வக்கந்தம் வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த படம் ' நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' . இப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தமிழில் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என டப் செய்து வெளியிட்டனர். இதில் சரத்குமார், அர்ஜுன், நதியா, அனு இம்மானுவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் சுமாரான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா இந்த படத்தை வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் ரீ ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளனர்.