ஓ.ஜி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 755 days ago
சாஹோ பட இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஓ.ஜி' . பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி,என்ரான் ஹஸ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 27ந் தேதி திரைக்கு வரும் என இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.