உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் கேமியோ ரோலில் ரஜினி?

மீண்டும் கேமியோ ரோலில் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் மற்றும் இயக்குனர் சவுந்தர்யா. ஏற்கனவே தனது அப்பாவை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கினார். பின்னர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவது படமாக வி கிரியேஷன்ஸ் எஸ். தாணு தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கின்றார்.

ஜஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்ததை தொடர்ந்து இப்போது ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவிற்காக ராகவா லாரன்ஸ் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிக்க 10 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !