உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலர் தினத்தில் வெளியாகும் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் போஸ்டர்!

காதலர் தினத்தில் வெளியாகும் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் போஸ்டர்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் - திரிஷா மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் மார்ச் மாதத்தோடு படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு பிறகு எந்த புதிய அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தகவல் அஜித் ரசிகர் வட்டாரத்தை உற்சாகப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !