உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமணம் எப்போது? - ஓவியா சொன்ன பதில்

திருமணம் எப்போது? - ஓவியா சொன்ன பதில்


தமிழில் களவாணி, முத்துக்கு முத்தாக, மெரினா, மதயானை கூட்டம் உள்பட பல படங்களில் நடித்தவர் ஓவியா. பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது 32 வயதாகும் ஓவியா திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், சிங்கிளாக வாழ்வதிலேயே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொரு துணை இல்லை என்பது எனது எண்ணம்.

திருமணம் என்பது அதற்கான நேரம் வரும்போது தான் அமையும். அதுவாக வந்தால் ஓகே. இல்லை என்றாலும் பரவாயில்லை. நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பேன். யாரிடத்திலும் எதையும் எதிர்பார்க்கவில்லை. சிங்கிளாக வாழ்வதையே நான் மிகவும் விரும்புகிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஓவியா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !