"சாய் வித் செலிபிரிட்டி”யில் இந்தவாரம் இசையமைப்பாளர் சத்யா
ADDED : 610 days ago
ஜெயா டிவியில் சாய் வித் செலிபிரிட்டி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் ஓர் கலகலப்பான நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பவித்ரா கொடுக்கும் டீ பார்ட்டியில் ஆறு வகையான டீ இருக்கும். ஒரு ஒரு டீயினுள்ளே இருக்கும் சுவாரசியமான கேள்விகளுக்கு சினிமா பிரபலங்களின் அசத்தலான பதில்களும் அதன் பின்னால் இருக்கும் கலகலப்பான அனுபவங்களையும் நம்முடன் பகிர இருக்கின்றனர். இந்த வாரம் இசையமைப்பாளர் சத்யா கலந்து கொண்டு அவர் இசையமைத்த படங்களின் பற்றியும், பாடல்களை பற்றியும் நம்முடன் பகிர இருக்கிறார்.