நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: அபராதம் விதித்த நீதிமன்றம்
ADDED : 592 days ago
கடந்த 2018ம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் குறித்து தனது முகநூலில் ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டு இருந்தார் நடிகர் எஸ்.வி .சேகர். அதையடுத்து அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று எஸ். வி .சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அந்த அபராத தொகையை செலுத்தி விட்ட எஸ்.வி. சேகர், ஒரு மாத சிறை தண்டனை என்ற தீர்ப்பை எதிர்த்து மேலும் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக அவர் மீதான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.