மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
591 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
591 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
591 days ago
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் ‛96'. இந்தப் படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த 96 படத்தின் பாடல் ஒலிப்பதிவின் போது நடந்த ஒரு நிகழ்வை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார் பாடகி சின்மயி.
அவர் கூறுகையில், இந்த படத்தில் தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை பாடும்போது ஏற்கனவே படமாக்கப்பட்ட அந்த காட்சிகளை திரையில் ஓட விட்டு, திரிஷாவின் உதட்டு அசைவுக்கு ஏற்ப, தான் பின்னணி பாடியதாக தெரிவித்திருக்கிறார். அப்படி அவரது உதட்டு அசைவுக்கு பாடுவது பெரிய சவாலாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கும் சின்மயி, அது குறித்த வீடியோவை வெளியிட்டு இதை பார்த்தாலே நான் அவர் உதட்டு அசைவுக்கு ஏற்ப எப்படி பாடியிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
591 days ago
591 days ago
591 days ago