நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றம் தொடங்கிய மலிவு விலை உணவகம்!
ADDED : 590 days ago
நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ஏழை மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்கான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி, மலிவு விலை உணவகம் ஒன்றை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் தொடங்கி இருக்கிறார். சாலை ஓரத்தில் சிறிய வண்டியில் இந்த உணவகம் செயல்படுகிறது. இதில் வெஜிடெபிள் பிரியாணி வெறும் பத்து ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். தினமும் மதியம் 12 மணி முதல் ஒன்றரை மணி வரை இங்கு இந்த உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டு 500 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.