புதுவீடு கட்டிய காயத்ரி யுவராஜ்! குவியும் வாழ்த்துகள்
ADDED : 601 days ago
பிரபல சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் சில மாதங்களுக்கு முன் தான் பெண் குழந்தையை பெற்றெடுத்து மகிழ்ச்சியை கொண்டாடினார். இந்நிலையில், அவர் தற்போது புதிதாக வீடு ஒன்றை கட்டி கிரஹப்பிரவேசம் நடத்தியுள்ளார். தனது நான்கு மாத குழந்தை யுகா அந்த வீட்டினுள் அடியெடுத்து வைக்கும் நெகிழ்ச்சியான புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் காயத்ரி யுவராஜுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.