உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துணிவு பட வில்லன் ரித்து ராஜ் சிங் காலமானார்!

துணிவு பட வில்லன் ரித்து ராஜ் சிங் காலமானார்!


எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் துணிவு. இந்த படத்தில் சுனில் தத்தா என்ற வேடத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகர் ரித்துராஜ் சிங். இவர் துணிவு படத்தில் ஜான் கொக்கனுடன் இணைந்து வங்கியில் திருடுபவர்களில் ஒருவராக நடித்திருந்தார். அது மட்டுமின்றி அஜித்குமாருக்கும் இவருக்குமிடையே அதிரடியான ஒரு சண்டை காட்சியும் இருந்தது. மேலும் பாலிவுட்டில் திரைப்படங்கள் மட்டுமின்றி ஹிந்தி சீரியல்களிலும் நடித்து வந்த ரித்துராஜ் சிங், கணையம் அலர்ஜி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். நடிகர் ரித்து ராஜ் சிங்கிற்கு தற்போது 59 வயது ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !