உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கங்குவா டப்பிங்கை துவக்கினார் சூர்யா

கங்குவா டப்பிங்கை துவக்கினார் சூர்யா

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்துள்ள படம் கங்குவா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம், 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. சரித்திரம் மற்றும் பேண்டஸி கலந்த படமாக உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சூர்யா, கங்குவா படத்திற்கு டப்பிங் பேச தொடங்கி இருக்கிறார். இது குறித்த புகைப்படம் மற்றும் தகவலை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !