விஜய் மகன் இயக்கத்தில் துல்கர் சல்மான்?
ADDED : 700 days ago
நடிகர் துல்கர் சல்மான் மலையாள மொழி படங்களைக் கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதி, கவின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. இப்போது கதாநாயகனாக நடிக்க துல்கர் சல்மான் உடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.