உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கலைக்கும், காதலுக்கும் நன்றி - நயன்தாரா

கலைக்கும், காதலுக்கும் நன்றி - நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்தாண்டு ‛ஜவான்' படம் மூலம் ஹிந்தியிலும் வரவேற்பை பெற்றார். ஷாரூக்கான் நாயகனாக நடித்த இந்த படத்தை அட்லி இயக்க, அனிருத் இசையமைத்து இருந்தார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். ஆயிரம் கோடி வசூலை கடந்து இந்த படம் சாதனை படைத்தது. இந்த படத்திற்காக ஷாரூக், நயன்தாரா, அட்லி மற்றும் அனிருத் ஆகியோருக்கு தனியார் சார்பில் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற நயன்தாரா அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ‛‛என்னைக்கும் என் கூடவே இருக்கும் உயிர்-க்கும், உலக்-கிற்கும், என்னுடைய எல்லாமுமான விக்கிக்கும் ஒரு ஆயிரம் கோடி லவ் யூ. கலைக்கும் காதலுக்கும் நன்றி, அன்புக்கும், ஆண்டவனுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !