உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோ ஆனார் முத்தையா மகன்

ஹீரோ ஆனார் முத்தையா மகன்

குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களை இயக்கி உள்ளார் முத்தையா. தற்போது முத்தையா தான் இயக்கும் அடுத்த படத்தில் தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.

இந்தப் படத்தில் தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா கதாயகிகளாக நடிக்கின்றனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை இந்த படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் முத்தையா திட்டமிட்டுள்ளார். படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை எம்.சுகுமார் மேற்கொள்ள, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மதுரை பின்னணியில் படம் தயாராகிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !