‛லால் சலாம்' வெற்றி நிகழ்வில் ரஜினி - ரஹ்மான்
ADDED : 592 days ago
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களிலும், ரஜினி கெஸ்ட் ரோலிலும் நடித்து திரைக்கு வந்த படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக ரஜினியின் கேரக்டர் கவரக்கூடிய இருந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி உள்ளனர். அதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ரஜினி உள்பட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த விஷ்ணு விஷால் , விக்ராந்த் ஆகிய இருவருமே பங்கேற்கவில்லை. இந்தபடம் இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரத்தில் என்ட்ரியாகி உள்ளது. இதை குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை லைகா நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.