உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷூடன் 5வது முறையாக கூட்டணி அமைத்த பிரகாஷ் ராஜ்

தனுஷூடன் 5வது முறையாக கூட்டணி அமைத்த பிரகாஷ் ராஜ்

கேப்டன் மில்லர் படத்திற்கு பின் தனுஷ் தனது 50வது படமான 'ராயன்' படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்களாக அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளதாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். ஏற்கனவே தனுஷ், பிரகாஷ்ராஜ் இணைந்து திருவிளையாடல் ஆரம்பம், வேங்கை, அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்போது ஐந்தாவது முறையாக ராயன் படத்திற்காக இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !