மகளுக்காக புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ஷாகித் கபூர்
ADDED : 652 days ago
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாகித் கபூர். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். 2015ல் மீரா ராஜ்புத் என்பவரை ஷாகித் திருமணம் செய்தார். இவர்களுக்கு மிஷா, ஜைன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது மகளுக்காக புகைபிடிக்கும் பழக்கத்தை தான் விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார் ஷாகித்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ‛‛எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. எனது மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்து புகைபிடித்து வந்தேன். பிறகு ஒருநாள் எவ்வளவு நாளைக்கு தான் இப்படி இருப்போம் என தோன்றியது. அப்போது தான் இனி புகைபிடிக்க கூடாது என முடிவெடுத்து, அந்த பழக்கத்தை விட்டுவிட்டேன்'' என்றார்.