லாரன்ஸ் படத்தை இயக்கும் விஷால் பட இயக்குனர்
ADDED : 587 days ago
சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தை விஷாலை வைத்து அயோக்யா என்கிற படத்தை இயக்கிய வெங்கட் மோகன் என்பவர் தான் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் சில மிருகங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறுவதால் இதன் பெரும்பாலான படப்பிடிப்பை தாய்லாந்து வனப்பகுதியில் நடத்த உள்ளனர். 2025ம் ஆண்டு சம்மருக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.