மேலும் செய்திகள்
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி'
579 days ago
அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2!
579 days ago
கடந்த வருடம் சிம்பு நடிப்பில் வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்திற்கு பிறகு வருண் நடிப்பில் இயக்கி முடித்துவிட்ட 'ஜோஸ்வா : இமைபோல் காக்க' திரைப்படம் வரும் மார்ச் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. இதுதவிர அவர் இயக்கியுள்ள 'துருவ நட்சத்திரம்' படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இன்னொரு பக்கம் கவுதம் மேனன் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
லியோ படத்தை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் பஷூக்கா என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் கவுதம் மேனன். இவரது பிறந்தநாளை முன்னிட்டு கவுதம் மேனனின் கேரக்டர் போஸ்டரை பஷூக்கா படக்குழு வெளியிட்டனர். இந்த படத்தில் அவரது கதாபாத்திர பெயர் பெஞ்சமின் ஜோஸ்வா. அந்த வகையில் கவுதம் மேனனின் ஜோஸ்வா பட டைட்டிலும், பஷூக்கா படத்தில் அவர் நடிக்கும் கேரக்டரின் பெயரும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.
579 days ago
579 days ago