உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுவீடு கட்டிய மதுரை முத்து

புதுவீடு கட்டிய மதுரை முத்து

சின்னத்திரையில் பிரபலமாக வலம் வருகிறார் நகைச்சுவை கலைஞரான மதுரை முத்து. மொக்கை ஜோக்காக இருந்தாலுமே ஆன் ஸ்பாட்டில் கவுண்டர் அடித்து சிரிக்க வைத்துவிடுவார். சமீபகாலமாக பட்டிமன்றத்திலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் தற்போது தனது கனவு இல்லத்தை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளார். பிரம்மாண்டமான பொருட்செலவில் கட்டி முடித்துள்ள இந்த வீட்டின் கிரஹப்பிரவேச நிகழ்வை தனது குடும்பத்து உறுப்பினர்களுடன் சிம்பிளாக நடத்தி முடித்துள்ள மதுரை முத்து, அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து மதுரை முத்துவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !