காசி கோயிலில் தமன்னா சாமி தரிசனம்
ADDED : 633 days ago
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. கடைசியாக தமிழில் 'ஜெயிலர்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். தமன்னா அவரது காதலர் நடிகர் விஜய் வர்மாவை விரைவில் மணக்கப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன.
இந்து மதத்தில் தீவிரப் பற்று கொண்ட தமன்னா அடிக்கடி தெய்வ தரிசன சுற்றுலா செல்லுவது வழக்கம். அந்த விதத்தில் தற்போது காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
“ஹர் ஹர் மகாதேவ்… காசி விஸ்வநாத், வாரணாசி,” என அப்புகைப்படங்களில் குறிப்பிட்டுள்ளார்.