உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் அடுத்த படம் ‛ஆளப்போறான் தமிழன்': அட்லி இயக்குகிறார்!

விஜய்யின் அடுத்த படம் ‛ஆளப்போறான் தமிழன்': அட்லி இயக்குகிறார்!


தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‛கோட்' படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்த படத்தை முடித்ததும் விஜய்யின் 69வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அட்லி, எச்.வினோத், கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இயக்குனர் அட்லியிடம், ‛அடுத்து விஜய்யை வைத்து நீங்கள் படம் இயக்கினால் எப்படிப்பட்ட டைட்டில் வைப்பீர்கள்?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛ஆளப்போறான் தமிழன் என்று டைட்டில் வைப்பேன்'' எனக் கூறினார். இது வைரலானதை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது அட்லி தான். அரசியல் கதையில் உருவாகும் அந்த படத்தில் விஜய் முதல்வர் வேடத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவலை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலாக்கி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !