ஐஸ்வர்யா ராஜேஷின் பட பூஜையில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி!
ADDED : 619 days ago
விஜய் சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது மோகன்தாஸ், கருப்பர் நகரம் போன்ற சில படங்களில் நடித்து வருகிறார். அதோடு ஏற்கனவே பூமிகா, பர்கானா ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்தவர் தற்போது ‛வளையம்' என்ற ஒரு படத்திலும் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஆக்சன் கலந்த சயின்ஸ் பிக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை மனோ பாரதி என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற போது அதில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பட குழுவினரை வாழ்த்தினார்.