உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுமுகங்கள் நடிக்கும் 'காக்கா கழுகு'

புதுமுகங்கள் நடிக்கும் 'காக்கா கழுகு'

ராக் அண்ட் ரோல் புரொடக்ஷன், பிளாக் டைமண்ட் ஸ்டூடியா சார்பில் யஸ்மீன் பெகன், சையத் ஜாபர் இணைந்து தயாரிக்கும் படம் 'காக்கா கழுகு'. பொதுமேடை ஒன்றில் ரஜினி பேசிய காக்கா கழுகு கதை மிகவும் பிரபலம். அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் சுந்தர் மஹாசரி, டேவிட் மனோ ஆகியோர் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள். கலையரசி ஜெகன்னாதன், யஸ்மீன் புவனேஸ்வரி ஆகியோர் ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். வெங்கட் முனிரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார், சதீஷ் குமார் இசை அமைக்கிறார். ரங்கநாதன் பிரகாஷ் இயக்குகிறார். ரொமான்டிக் த்ரில்லர் படமாக தயாராகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !