மீண்டும் இணைந்த போர் தொழில் பட கூட்டணி
ADDED : 586 days ago
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படம் 'போர் தொழில்'. இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார். க்ரைம் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இப்படம் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இதன் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மீண்டும் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க இப்போது ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இது போர் தொழில் 2ம் பாகம் ஆக இருக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.