60 வயது கன்னட நடிகருக்கு ஜோடியாக நடித்த ரட்சிதா
ADDED : 622 days ago
சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம் உள்ளிட்ட பல டிவி தொடரில் நடித்தவர் ரட்சிதா மகாலட்சுமி. ஏற்கனவே உப்பு கருவாடு என்ற படத்தில் நடித்திருந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சினிமாவில் பிசியாகி வருகிறார். தற்போது தமிழில் மெய் நிகரே, பயர், எக்ஸ்ட்ரீம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கன்னடத்தில் ரங்கநாயகா என்ற படத்தில் ஜக்கேஷ் என்ற 60 வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. கன்னடத்தில் 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ள ரட்சிதா, மேலும் ஒரு புதிய கன்னட படத்திலும் தற்போது கமிட்டாகியுள்ளார்.